பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள சத்குரு சம்ஹார மூர்த்தி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தை பெரம்பலூரை சேர்ந்த இன்பராஜ் என்பவர் பராமரிப்பு செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் ஆலயத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டு இன்று காலை கோவிலுக்கு வந்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் பொதுமக்கள் செலுத்தியிருந்த 2000 ரூபாய் மற்றும் வேல், காமாட்சி விளக்கு, குத்துவிளக்கு போன்றவை காணாமல் பஸ் போயிருந்தது.

மேலும் இது குறித்து இன்பராஜ் பெரம்பலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவம் இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் குற்றவாளிகள் விட்டு சென்ற தடையைகளையும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.