உங்களுக்கும், உங்கள் வளர்ச்சிக்கு உதவும் வகையில் 2026ல் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் 2029ல் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் . குறிப்பாக கடம்பூர் செ.ராஜூ போன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும்
கோவில்பட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவில்பட்டியில் இன்று தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழா – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், குளோபல் சேப்டி மேச்சஸ் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன், தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம், சிவகாசி ஆல் இந்தியா சேம்பர் ஆஃப் மேச் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் சாத்தூர், குடியாத்தம், தென்காசி, தருமபுரி, பொள்ளாச்சி, காவேரிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கங்கள் இணைந்து தமிழ்நாடு தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழா கோவில்பட்டி – சாத்தூர் ரோட்டில் உள்ள எஸ்.எஸ்.டி.எம்., கல்லூரி வளாகத்தில்,இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, நூற்றாண்டு விழா குழு தலைவர் எஸ் .மகேஸ்வரன் தலைமை வகித்த்ர். விழா குழு துணை தலைவர் எஸ்.எஸ்.டி.கிருஷ்ணமூர்த்தி, பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
விழாவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேருரையாற்றுகையில் எனக்கு மதுரை என்பதால் எனது உறவினர்கள் மூலமாக இந்த மாவட்டங்களை பற்றி அறிந்து உள்ளேன்.
பெண்கள் முன்னிலையில் நடக்கும் தொழில் தீப்பெட்டி .. பெண் தொழிலாளர்களுக்கு வணக்கம், வறட்சியான பூமியில் தொழிலையும் செய்து குடும்பத்தினை காப்பாற்றி.. தீப்பெட்டி தொழில் வளர்ச்சி அடைந்ததற்கும் பெண்கள் தான், வண்டியின் சக்கரம் பெண்கள் தான்.. மேடையில் ஆண்கள் அதிகமாக இருக்கிறார்கள்.. ஆனால் ஒரு பெண் தொழிலாளர்கள் இருந்து இருக்க வேண்டும் பிரதமர் நரேந்திர மோடியிடம் தென் மாவட்டங்களில் எந்த கோரிக்கை வைத்தாலும் உடனடியாக செய்ய சொல்லுவார்தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது..எங்களுக்கு எம்.பிக்கள் இல்லை என்றாலும் தமிழகத்திற்கு திட்டங்களை செய்ய சொல்வார்..
இந்த விழாவை பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளுக்காக சமர்ப்பிக்கிறேன்..நான் சக்கரத்தில் உள்ள ஒரு ஆரம்,2047க்குள் வளர்ச்சி பெற்ற நாடாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்
2047 க்குள் தீப்பெட்டி, பட்டாசு தொழில் பொருளாதாரத்தை உயர்த்த திட்ட ஆய்வு அறிக்கை கொடுத்தால் மத்திய அரசு செயல்படுத்த தயராக உள்ளது.
உங்களுக்கும், உங்கள் வளர்ச்சிக்கு உதவும் வகையில் 2026ல் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் 2029ல் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் . குறிப்பாக கடம்பூர் செ.ராஜூ போன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும்
நயினார் நாகேந்திரனை தலைவர் என்று நான் அழைப்பேன் இங்கு எல்லோரும் அவரை பண்ணையார் என்று அழைக்கிறார்கள் இன்னும் நானும் அப்படியே அழைக்கிறேன்..
தென்மாவட்டங்களில் தொழில் தொடர்பாக திட்டங்கள் குறித்து ஆய்வு அறிக்கை கொடுத்தால் அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும் 2047ல் தென் மாவட்டங்கள் வளர்ச்சி அடைந்த மாவட்டங்களாக மாறும் ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது குறைப்பு மாற்றம் அல்ல புரட்சி .. பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய தீபாவளி பரிசினை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் – இதனால் 375 பொருட்கள் விலை குறையும். 10 சதவீதம் குறைத்துள்ளோம், பொருட்கள் விலை குறையும் என்றார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சினை தொடர்ந்து தீப்பெட்டி பெண் தொழிலாளர்கள் மேடைக்கு வரவைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
முன்னதாக தீப்பெட்டி தொழில் தொடர்பான கண்காட்சியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்.
விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்புரையாற்றுகிறார். கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் , முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ., ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பரமசிவம் விளக்க உரையாற்றினார்.இந்த விழாவில், கோவில்பட்டி, சிவகாசி, தென்காசி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திரளானோர் பங்கேற்றனர் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலும் விழாவில் கலந்து கொள்ள வருபவர்களுக்காக உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது
தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் என சுமார் 10,000 க்கு மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.மேலும் பாதுகாப்பு பணியில் போலீசார் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களும் ஈடுபட்டனர்
