தேனி அருகே கல்விக் கடன் முகாமில் மாணவர்களுக்கு வங்கி கடனுதவி களை மாவட்ட கலெக்டர் வழங்கல் தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பாக நடைபெற்ற கல்விக் கடன் முகாமில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் முதற்கட்டமாக 12 மாணவர்களுக்கு 1.95. கோடி மதிப்பிலான வங்கி கடனுதவி களை வழங்கி பேசும்போது உயர் கல்வி அலுவலருக்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும் அனைவரும் கல்வி கயில வேண்டும் என்பதற்காகவும் இந்த கல்விக்கடன் முகாம் நடத்தப்படுகிறது.
இந்த முகாமில் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வங்கிகளும் பங்கேற்பதால் வங்கிகளில் வழங்கப்படும் கல்விக்கடன் திட்டங்கள் வட்டி சலுகை திருப்பி செலுத்தும் முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக விளக்கி பேசினார் இந்த நிகழ்ச்சியில் முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் ரவிக்குமார் தாசில்தார் சதீஷ்குமார் உள்பட அனைத்து வங்கி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
