கந்தர்வ கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் ரகமதுல்லா சமூக நீதி நாள் உறுதி மொழியை வாசித்தார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் – யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைபிடிப்பேன்! சுயமரியாதை ஆளுமைத்திறனும் – பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்! சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்.
.

மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!
சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன் என மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்வில் ஆசிரியர்கள் மணிமேகலை சிந்தியா செல்விஜாய் வெள்ளைச்சாமி, ஜெம்ம ராகினி சகாய ஹில்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கந்தர்வக்கோட்டையில் தலைமையாசிரியர் விஜயலட்சுமி தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.