நீலாவதி டிரஸ்ட் சார்பில் திருமணம்” மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா தலைமையில் ஏழை பெண் மணமகள் மாரிச்செல்வி மணமகன் பெரியசாமி திருமணம் மதுரை பரவை ஸ்ரீ மயூரநாதர் திருக்கோயிலில் நடை பெற்றது. எழுத்தாளர் விவேக் ராஜ் மாப்பிள்ளைக்கு மோதிரம், பிரேஸ்லட் வழங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் நடிகர் அப்பா பாலாஜி, திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், வழக்கறிஞர் சோனு (எ) ப்ரியதர்ஷினி, குழந்தை நட்சத்திரம் லியானா மற்றும் சொந்த பந்தங்கள், நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் கூறினார்கள்.
