பெருங்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பண்டாரவிளையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட தேசிய சுகாதார அறக்கட்டளை 15 வது மானிய குழு மூலம் ரூபாய் 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது இவ்விழாவில் பெருங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் டாக்டர் எஸ் புவனேஸ்வரி சண்முகநாதன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்

நிகழ்ச்சியில் பெருங்குளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜி வேதமாணிக்கம் பேரூராட்சி கவுன்சிலர்கள் காமராஜ், சுப்பிரமணியன், பட்டுப்பாண்டி, வத்சலா மாணிக்கம் மற்றும் அதிமுக மாவட்ட சிறுபான்மைபிரிவு இணைச் செயலாளர் எப்ராயீம் மாவட்ட வர்த்தக அணி தலைவர் திருத்துவசிங் போக்குவரத்து பிரிவு தூத்துக்குடி செயலாளர் வெள்ளையா மற்றும் நிர்வாகிகள் சுந்தரராஜன், சுரேஷ் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்