தமுமுக சார்பில் ரத்ததான முகாம் மற்றும் நலதிட்ட உதவிகள்
வழங்கும் விழா. ஜவாஹிருல்லா எம் எல் ஏ தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 31-ம் ஆண்டு தொடக்க விழா
முன்னிட்டு கோவிந்தகுடி கிளை மற்றும் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய ரத்ததான முகாம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்பு தலைவர் ரஹ்மத் அலி தலைமை தாங்கினார்.ஜமாஅத் நிர்வாகிகள் முஹம்மது பாரூக், சாதிக் பாட்ஷா,சம்சுதீன்,அலிம் பாட்ஷா,முஹம்மது ஹசன், ஜெகபர் அலி,அப்துல் மாலிக், முபாரக் அலி, மருத்துவ
சேவை அணி மாவட்ட செயலாளர் ஹாஜா மைதீன் இஸ்லாமிய பிரச்சார பேரவை நிர்வாகி சாதிக் பாட்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைவரையும் கிளை தலைவர், அஹமது கபீர் வரவேற்றார் முகாமை மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தொடங்கி வைத்து துப்புரவு பணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார். ரத்த வங்கி மருத்துவர் கிஷோர் குமார்,பள்ளி தாளாளர் அப்துல் லத்தீப் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக ரத்த தானத்தின் அவசியம் குறித்தும் விபத்து சிக்கும் போது ரத்த இழப்பு ஏற்படுகிறது.பெரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது கூடுதலாக ரத்தம் தேவைப் டுகிறது, இதுதவிர தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். தீக்காயம் அடைந்தவர்கள், ரத்த சோகை அதிகம் உள்ளவர்கள பிரசவ காலத்தில் ஏற்படும் ரத்த இழப்பிற்கும், இரத்த புற்றுநோய் தாக்கியவர்களுக்கும் உயிர் காக்கும் மருந்தாக ரத்தம் தேவைப்படுகிறது என தெரிவித்தார்.மேலும் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்வதால் மாரடைப்பு வருவது குறைகிறது.
புதிய இரத்த அணுக்கள் உருவாகிறது என முகாமில் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பு குழு நிர்வாகிகள் பரகத்துல்லா
நூருல் அமீன்,புர்க்கான் அலி, அஸ்ரப் அலி, ஜாபர், ஜெகபர்தீன்
சமூக நீதி மாணவர் நிர்வாகி சபீர் முஹம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் முன்னாள் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹ்மான் அல் ஜலால் நன்றி கூறினார்.