தஞ்சாவூர், ஆக- 30. தஞ்சாவூர் மேம்பாலம் அருகே உள்ள ரெட்கிராஸ் கூட்ட அரங்கில் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், தஞ்சை மாவட்டம் கிளை சார்பில் மறைந்த தினமணி நாளிதழின் புகைப்படக் கலைஞரும், உழைக்கும் பத்திரிகையாளர் சங்க உறுப்பினர் தேனாரமுதன் குடும்பத்திற்கு நலநிதி வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சியில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் கலந்து கொண்டு மறைந்த தினமணி நாளிதழின் புகைப்படக் கலைஞர் தேனாரமுதன் குடும்பத்திற்கு நலநிதி ரூ.1 லட்சம் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வழங்கினார். அதை தேனாரமுதன் மனைவி கிருஷ்ணவேணி அம்மாள், மூத்த மகன் திலீபன். இளைய மகன் சண்முக பாண்டியன், சகோதரரும் முன்னாள் மாநகராட்சி உறுப்பினருமான ராஜராஜன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

முன்னதாக தஞ்சை மாவட்டத் தலைவர் சங்கர் வரவேற்றார். முடிவில் மாவட்ட செயலாளர் (பொறுப்பு) லியோ யாகோப் ராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள் விஜயகுமார், ஜெயச்சந்திரன், ஷேக்தூவூத், இர்ஃபான், ஜெயக்குமார், வரதராஜன், செம்பியன் சென்னை பத்திரிகையாளர் சங்கம் தஞ்சை மாவட்டத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் பெரியார், விசிறி சாமியார் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.