சீர்காழியில் திமுக பொறியாளர் அணி சார்பில் ஒன்றிய நகர பேரூர் கழக புதிய நிர்வாகிகள் அறிமுக ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் திமுக பொறியாளர் அணி சார்பில் ஒன்றிய நகர பேரூர் கழக பொறியாளர் அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் அறிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது மாவட்ட செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் தலைமை தாங்கினார்

நிகழ்ச்சியில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காழி கலைவாணன் வரவேற்பு உரை ஆற்றினார் தஞ்சை மண்டல பொறியாளர் அணி பொறுப்பாளர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார் தொடர்ந்து பொறியாளர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுக விழா நடைபெற்றது அதனை தொடர்ந்து பொறியாளர் அணி சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது

மேலும் கோயமுத்தூரில் நடைபெறும் மாநில அளவிலான கூட்டத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து அணி திரளுவோம் என முடிவெடுக்கப்பட்டது மாவட்டச் செயலாளர் கூறுகையில் 23 அணிகளிலே சிறப்பான அணிகளாக இளைஞர் அணி உள்ளது அடுத்தபடியாக பொறியாளர் அணி செயல்பட்டு வருகிறதாக பெருமிதம் தெரிவித்தார் நிகழ்ச்சியில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் நிக்கேஷ் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி எம் ரவி ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன் பஞ்சுகுமார் நகர செயலாளர் சுப்பராயன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்