துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி வரதராஜபுரம் தனியார் திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 22 ந் தேதி “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. இம்முகாமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் துவக்கி வைத்தார்.

இம்முகாமில் வேங்கடத்தானூர், மருவத்தூர், அம்மம்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.இம்முகாமில் துறையூர் வட்டாட்சியர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, ரவிச்சந்திரன்,வேங்கடத்தானூர் ஊராட்சி செயலர் மாலதி, மருவத்தூர் ஊராட்சி செயலர் செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், மத்திய ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை,தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஐயப்பன், மண்டல துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ், வருவாய் ஆய்வாளர்கள் இளவரசி (துறையூர்),கோபி(வேங்கடத்தானூர் ), வேங்கடத்தானூர் கிராம நிர்வாக அலுவலர் புஷ்பராஜ், மருவத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்