உடனுக்குடன் தீர்வு மகளிர் உரிமை தொகைக்காக ஏராளமான பெண்கள் பங்கேற்றப்பு.
இந்த முகாமில் வடக்கு வட்டார துணை ஆணையர் ரவி தேஜா கட்டா மற்றும் மாவட்ட கழக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர். 1 வது மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு. மற்றும் மண்டல உதவி ஆணையர் பொறுப்பாளர் பாண்டியன். பாபு. திருவொற்றியூர் வட்டாட்சியர் சகாயராணி மற்றும் அவைத்தலைவர் புரிஞ்சு கணேசன். ஆசைத்தம்பி. சைனஸ். தமிழ்ச்செல்வன். எம் வி குமார். குமரேசன்.திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருவொற்றியூர் 10 வது வார்டு உட்பட்ட சன்னதி தெரு மேற்கு மாட வீதி சின்ன மேட்டுப் பாளையம் மாட்டு மந்தை தேரடி கோமாதா நகர் உள்ளிட்ட பகுதியிலிருந்து
மகளிர் உரிமைத் தொகை கேட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.
பத்தாவது வார்டு மாமன்ற உறுப்பினரும் மண்டல குழு தலைவருமான தி மு தனியரசு பொதுமக்களை வரவேற்று வெற்றிலை பாக்கு தாம்பூலத்துடன் தண்ணீர் பாட்டில் பிஸ்கட் உள்ளிக்கவைகளை அனைவரும் வழங்கி வரவேற்றார்.

இந்த சிறப்பு முகாமில் நகர்ப்புற பகுதிகளில் 13 துறைகளின் 43 சேவைகளும் வழங்கப்படுகிறது இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி திருவெற்றியூர் சென்னை மாநகராட்சி 1 வது மண்டலம் 10 வது வார்டு உங்களுடன் ஸ்டான்லின் திட்டம் சிறப்பு முகாம் நடைப்பெற்றது

இந்த தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்ட முகாமில் ஆயிரக்கணக் கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது ஊனமுற்றோர் மற்றும் முதியோர்களுக்கு வீல் சேர் வசதி செய்யப்பட்டு அவர்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.

பொது மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து தேவையான உதவிகளை உடனடியாக செய்து கொடுக்க அதிகாரியிடம் அறிவுறுத்திய நிலையில் பயனாளிகளுக்கு பட்டா பெயர் மாற்றம் கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டம் 200 பேருக்கும் மகளிர் உரிமைத்துறை 800 பேருக்கும் மற்றும் பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட உடனடி தீர்வு காண சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

சிறப்பு முகாமில் கலைஞர் உரிமைத்தொகை , ஜாதி சான்றிதழ் , ஆதார் கார்டு ரேஷன் கார்டில் பெயர் நீக்குதல் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட சான்றிதழ்களை உடனடியாக பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

13 துறைகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர் பரிசீலனை செய்யப்பட்டு உடனுக்குடன் திருத்தம் செய்யப்பட்டு உடனுக்குடன் தீர்வு கண்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெண்கள் உரிமைத் தொகை ரேஷன் கார்டு , ஆதார் கார்டு , ஜாதி சான்றிதழ்களைந உடனடியாக வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த பெண்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.