கோவை வி.எல்.பி.கல்லூரியில் நடைபெற்ற உலக புகைப்பட தின விழா கண்காட்சி காட்சி தொடர்பியல் துறை சார்பாக நடைபெற்ற இதில், பழமையான கேமரா மற்றும் புகைப்பட தொழில் நுட்பங்களை கண்ட மாணவர்கள் வியப்பு

புகைப்படத்தின் கலை, கைவினை, அறிவியல் மற்றும் வரலாற்றைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது…

இந்நிலையில் கோவைபுதூர் பகுதியில் உள்ள வி.எல்.பி.ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறை மாணவர்கள் சார்பாக லூமினா எனும் கேமரா, மற்றும் புகைப்பட தொழில் நுட்பம் தொடர்பான கண்காட்சி நடைபெற்றது…

காட்சி தொடர்பியல் துறை தொடர்பான பல்வேறு தகவல்களை கூறும் விதமாக இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழாவில்,கல்லூரியின் சி.இ.ஓ.மற்றும் செயலர் ஜெயஸ்ரீ சூர்யாகுமார் கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்தார்..

கல்லூரியின் முதல்வர் முனைவர் கலைவாணி முன்னிலை வகித்தார்..

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையின் முதன்மை புகைப்பட கலைஞர் ஜாக்சன்,சாவித்திரி போட்டோ ஹவுஸ் நிர்வாக இயக்குனர் பரசுராம்,லென்ஸ் ஸ்டோரிஸ் போட்டோ கிராபி நிறுவனர் விமல்ராஜ்,மற்றும் முன்னால் மாணவரும் பிரபல பிரசாத் போட்டோ கிராபி இந்திர பிரசாத்,ஆகியோர் கலந்து கொண்டனர்..

கண்காட்சியில் , பழமையான, அரிய மற்றும் மிகவும் சிறிய கேமராக்கள் முதல் புதிய டிஜிட்டல் கேமராக்கள் மற்றும் புகைப்பட தொழில் நுட்பங்களை காட்சி படுத்தி இருந்தனர்…

குறிப்பாக,உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வெவ்வேறு வகைப் புகைப்படங்கள் ,நிலப்பரப்பு, வனவிலங்கு, கலை,ஆன்மீகம்,இந்திய கலாச்சாரங்கள் புகைப்பட தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்த வரலாற்றுப் பதிவுகள் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றன…

கண்காட்சியை காண வந்த அரசு பள்ளி மாணவர்கள் பழங்கால டூரிங் டாக்கீஸ் அனுபவத்தை தரும் திரையில் சார்லின் சாப்ளின் படத்தை கண்டு மகிழ்ந்தனர்…

கண்காட்சிக்கான ஏற்பாடுகளை காட்சி தொடர்பியல் துறை தலைவர் ராஜ்கமல், மற்றும் கல்லூரியின் போட்டோகிராபி கிளப் ஒருங்கிணைப்பாளர் இவான்ஜலின்,உட்பட மாணவர்கள்,பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்..