விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் திருமாவளவனின் 63 வது பிறந்த நாளை முன்னிட்டு, அந்தியூர் ஒன்றியம் சார்பில், ஏழை எளிய மக்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது.
அந்தியூர் கார் அண்ட் அருகில், ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஊடக மைய அமைப்பாளர் சுரேஷ் செங்கோடன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், அந்தியூர் தொகுதி செயலாளர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அந்தியூர் ஒன்றிய செயலாளர் சிறுத்தை தங்கராசு தலைமை விகித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்தியூர் எம்எல்ஏ., வெங்கடாசலம், 100க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு, இலவச சேலை மற்றும் அன்னதானம் வழங்கி பேசினார். இதில், மகளிர் மாவட்ட செயலாளர் சீதா கவுரி, ஒன்றிய பொருளாளர் துரை வளவன், தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேஷ், மகளிர் விடுதலை இயக்க ஒன்றிய செயலாளர் விஜயா, நிலமீட்பு மாநிலத் துணைச் செயலாளர் பில்லா மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
