தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தோ்தல் ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்கள் மூலமாக பல்வேறு கட்டமாக தோ்தல்கள் முறையாக அந்தந்த பகுதியில் உள்ள திருமண்டலத்திற்குட்பட்ட தேவாலயங்களில் அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ள குருவானவா்களிடம் சபை உறுப்பினா்கள் போட்டியிடுவதற்கு ஏதுவாக அறிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி சண்முகபுரம் பாிதுபேதுரு ஆலய திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பதவிக்கு பெருமன்றத் தேர்தல் அலுவலா் தூய பேதுரு ஆலயம் சண்முகபுரம் சேகரம் சார்பாக சேகரதலைவர் இம்மானுவேல் வான்ஸ்டாக்கிடம் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியன், ஞானராஜ் டேனியல், பிரபாகரன், அலெக்ஸ் ஞானமுத்து, பெண்கள் பிரிவில் தென்றல் மற்றும் 35 வயதுக்குட்பட்ட பிரிவில் நவீன் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்நிலையில் வேட்புமனு தாக்கல்செய்திருந்தவா்களை எதிர்த்து வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் அனைவரும் ஒரு மனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பின்னா் சபை உறுப்பினர்கள் உள்பட பலரும் திருமண்டல உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களை தொிவித்து சால்வை மாலை அணிவித்தனா்.