அரியலூர் ஒன்றியம் சுப்புராயபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 79வது சுதந்திர தினத்தையொட்டி ஊராட்சி செயலாளர் சத்தியசீலன் தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்

அதனை தொடர்ந்து நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் சத்தியசீலன் தீர்மானங்களை பொதுமக்கள் முன்பு வாசித்தார் கிராம நிர்வாக அலுவலர் சாந்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி பொய்யூர் நர்ஸ் இந்திராகாந்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

தாமரைக் குளம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் முத்து தலைமை தாங்கி தீர்மானங்களை படித்தார் வாலாஜா நகரம் ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் தமிழ்குமரன் பொதுமக்கள் முன்பு தீர்மானங்களை படித்தார் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்