தென்காசி
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்
அதனைத் தொடர்ந்து தேசிய கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் நகரமன்றஉறுப்பினர்கள் அக்பர்அலி, ராமகிருஷ்ணன், சங்கரநாராயணன், ரா. முருகன் , மாலதி, மாரி, தனலட்சுமி, நிலோபர் அப்பாஸ், யாஸர்கான் , மீராள் ஹைதர், சந்திரா அம்மையப்பன் மற்றும் பொறியாளர் அப்துல் காதர் , நகராட்சி மேலாளர் சண்முகவேல், உதவி செயற்பொறியாளர் அன்னம், சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர் , சுகாதார ஆய்வாளர்கள் சிவா , மாதவன் ராஜ் இளநிலை உதவியாளர் மாரியப்பன் நகராட்சி ஊழியர்கள் மற்றும் டி பி சி பணியாளர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் சாதனா வித்யாலையா பள்ளியின் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் , பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்
