செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில்
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பெயர் பலகை திறப்பு விழா
மற்றும் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சார்பில் தமிழக முழுவதும் பெயர் பலகை திறப்பு புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி மேம்பாலம் அருகே பெயர் பலகை திறந்து வைத்து அரசு தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பேனா பென்சில் வழங்கினர்.
இந்நிகழ்வில் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் எ.சுரேஷ்குமார்
மாநிலத் தலைவர் ஐ.அகமதுரியாஸ் ஆகியோரின் தலைமையில் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேரூராட்சி துணை தலைவர் வி.டி.ஆர்.வி.எழிலரசன்
செங்கை மாவட்ட தலைவர் அம்பேத்தணிகா ஒன்றிய தலைவர்கள் முருகேசன் ஏ.கோபாலகிருஷ்ணன் அச்சிறுபாக்கம் நகர செயலாளர் எம்.நரேஷ்குமார் அச்சிறுப்பாக்கம் நகர தலைவர் கே.டேவிட்முரளி அச்சிறுபாக்கம் நகர இணை செயலாளர் டி.கோபிநாத் நகர இளைஞரணி தலைவர் எம்.பரதன்(எ)தமிழரசன்
மற்றும் தக்ஷிணாமூர்த்தி டேவிட் ரசூல் ருத்ராபதி உள்ளிட்ட நிர்வாகிகள்
பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
