கரூர் மாவட்டம் திருமாநிலையூர் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தில் 36 வது வார்டுக்கு உட்பட்ட அதனை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இம்மாமில் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளிடம் மாநகர மேயர் கவிதா கணேசன் மனுக்களை பெற்று அதற்கு உடனடி தீர்வு காணப்படும் ஆணை பிறப்பித்தார்.

இம்முகாமில் பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ்,சொத்து வரி, மகளிர் சுய உதவிக் குழு கடனுதவி, மின் இணைப்பு, கால்நடை பராமரிப்பு கடன் உதவி, மருத்துவத்துறை என என பல்வேறு துறை சார்ந்த முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு மேயர் கவிதாகணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் கே.எம்.சுதா கரு வட்டாட்சியர் குமரேசன், மேற்கு மண்டலக்குழு பொறுப்பாளர் எஸ்பி கனகராஜ், கவுன்சிலர் வசுமதி பிரபு, வார்டு கழகத் துணைச் செயலாளர் மோகன்ராஜ், மாநகர பிரதிநிதி சந்துரு மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.