ரஜினிகாந்த் எப்போதும் படம் நடித்துக் கொண்டே இருப்பார் நோ ரிட்டயர்மென்ட் பல்லடத்தில் கூலி படம் பார்த்த நடிகர் சின்ன ஜெயந்த்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைந்துள்ள அருணோதயா திரையரங்கில் திரைப்பட முன்னணி காமெடி நடிகர் சின்ன ஜெயந்தி வெளியாகியுள்ள நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படத்தை கண்டு ரசித்தார்,

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது விறுவிறுப்பாக படம் செல்வதாகவும்நடிகர் சத்யராஜ் நாகார்ஜுன் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோராம் அருமையாக நடித்துள்ளார்கள்

என்றும் இப் படம் ஒரு வெற்றிப் படம் என்றும் தெரிவித்த அவர் தான் தற்போது சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருவதாகவும் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் கண்மணி அன்போடு என்ற படத்தில் தானும் ஐந்து வயது சிறுவனும் நடித்து வருவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு ரிட்டயர்மென்டே கிடையாது

அவர் நடித்துக் கொண்டே இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்,தொடர்ந்து பல்லடத்தில் படம் பார்ப்பதற்கு காரணம் அருணோதைய தியேட்டரை உரிமையாளர் செல்வத்தின் நட்பு என்றும் சென்னையில் கூட சினிமா லான்ச் என்ற முறை இல்லை ஆனால் பல்லடத்தில் உள்ள அருணோதியா தியேட்டரில் சினிமா லான்ச் முறை அமல்படுத்தியுள்ளது

வித்தியாசமானது ஏர்போர்ட்டில் தான் இருக்கும் தற்போது பல்லடத்தில் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார் பல்லடத்தில் இருப்பது போன்று இல்லை சென்னையில் இருப்பது போன்று அருணோதயா சினிமாஸ் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்