அரியலூர் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் உ முருகன் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் இராஜகுமார் அனைவரையும் வரவேற்று பேசினார்

அமைப்புச் செயலாளர் சக்கரவர்த்தி தலைமையிட செயலாளர் இளங்கோவன் மகளிர் அணி செயலாளர் மணிமேகலை துணைத்தலைவர் எழில் துணைத்தலைவர் மணிவண்ணன் இணை செயலாளர் தங்கமணி சட்ட செயலாளர் தவிக்குமார் பிரச்சார செயலாளர் மதிவாணன் செய்தி தொடர்பாளர் ரவிச்சந்திரன் மகளிர் அணி இணைச் செயலாளர் சுமதி கல்வி மாவட்ட செயலாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

முன்னாள் மாவட்ட தலைவர் சாமிதுரை முன்னாள் மாவட்ட செயலாளர் மோகன் முன்னாள் மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சிவமணி ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்க பேருரை ஆற்றினார்கள் மாவட்ட பொருளாளர் கருணாநிதி அனைவருக்கும் நன்றி கூறினார்

அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை பணியாளர்களை நியமனம் செய்ய வலியுறுத்துதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.