கோவை டேக்வாண்டோ அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் தங்கம் உட்பட ஐந்து பதக்கங்கள் வென்று அசத்தல் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான எட்டாவது ஹீரோஸ் டேக்வாண்டோ போட்டியில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஒரு தங்கம் நான்கு வெண்கலம் என ஐந்து பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்…

தாய்லாந்து நாட்டில் கடந்த 9 ,10 ஆகிய இரண்டு நாட்கள் சர்வதேச அளவிலான எட்டாவது ஹீரோஸ் டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றன சர்வதேச அளவில் நடைபெற்றஇதில்,பிரிட்டன்,அமெரிக்கா,சீனா,ஆஸ்திரேலியா,போலந்து,ரஷ்யா

,மலேசியா என உலகம் முழுவதும் இருந்து 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான வீர்ர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்..

இதில் இந்தியா சார்பாக கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் விக்ரம் பிரபு,முகம்மது அதில் அஜீஸ்,மற்றும் கிருத்திக் வர்ஷன் ஆகிய மூன்று மாணவர்கள் பங்கு பெற்றனர்..

பூம்சே கிரோகி ஆகிய இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்ற நிலையில், ,பூம்சே பிரிவில் மாணவன் கிருத்திக் ஒரு தங்கமும்,கிரோகியில் ஒரு வெண்கலம் பெற்றார்..
இதே போல மாணவன் விக்ரம் பிரபு கிரோகி ஒரு வெண்கலம்,முகம்மது ஆதில் அஜீஸ் பூம்சே மற்றும் கிரோகியில் தலா ஒரு வெண்கலம் என மூன்று மாணவர்கள் இணைந்து ஐந்து பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்…

இந்நிலையில் கோவை விமான நிலையம் வந்த கோவை டேக்வாண்டோ அகாடமி பயிற்சியாளர் நிர்மல் ராஜ்குமார் மற்றும் மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் சர்வதேச டேக்வாண்டோ போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு கோவை மாணவர்கள் பதக்கம் பெற்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்…