கந்தர்வகோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளி மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அ.ரகமதுல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்
முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு கலைஞர் செயல்படுத்திய போல் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதனுடைய தொடர்ச்சியாக தான் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பலனடையக் கூடிய வகையில் தாயுமானவர் என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் இல்லங்களுக்கு சென்று ரேஷன் பொருள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம்.

முதியோர்-மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேசன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்டையார்பேட்டையில் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை பொதுமக்களின் வீடு தேடிச் சென்றடைய செய்யும் வகையில் மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேசன் பொருட்களான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இதற்கு தாயுமானவர் திட்டம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள தண்டையார்பேட்டை கோபால் நகருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் நேரில் சென்று ரேசன் பொருட்களை வீடு தேடி வினியோகம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 34,809 நியாயவிலைக் கடைகளை சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கொண்ட 15 லட்சத்து 81 ஆயிரத்து 364 ரேசன் கார்ட்டில் உள்ள 20 லட்சத்து 42 ஆயிரத்து 657 பயனாளிகளும், 91 ஆயிரத்து 969 ரேசன் அட்டைகளில் உள்ள ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத்திறனாளிகளும் பயன் அடைய உள்ளனர்.

அதாவது மொத்தம் 16 லட்சத்து 73 ஆயிரத்து 333 ரேசன் கார்டுகளில் உள்ள 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பயனாளிகளுக்கு இதன்மூலம் பொருட்கள் கிடைக்க உள்ளது.
ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி உள்ள ரேசன் கார்டுகள் மற்றும் பயனாளிகளின் விவரங்கள் அனைத்தும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையிடம் இருந்து பெறப்பட்டு அந்தந்த பணியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மூடிய வேன்களில் பொருட்களை பாதுகாப்பாக கொண்டு செல்லும்போது மின்னணு எடை தராசு, பெருவிரல் ரேகை பதிவு செய்யும் எந்திரம் உள்ளிட்ட உபகரணங்களையும் கொண்டு சென்று ரேசன் பொருட்களை வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் பலன் அடையக் கூடிய வகையில் நேரடியாக ரேஷன் பொருள்கள் வாங்வதற்கு பதிலாக இல்லத்திற்கு சென்று வழங்கும் தாயுமானவர் திட்டத்தை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அலுவலர்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.