திருவெற்றியூர்.

திருவெற்றியூர் அரசு பள்ளி பழைய மாணவர்கள் இணைந்து நடத்தும் 41 ஆம் ஆண்டு விளக்கு பூஜையில் லலிதா சஹஸ்ரநாமம் 1008 மந்திரங்கள் முழங்க ஓம் சக்தி பராசக்தி வடிவுடை நாயகி என்று உச்சரித்து வழிப்பட்டனர்.


ஆடி மாத கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு அனைத்து அம்மன் கோவில்களிலும் பெண்கள் விரதம் இருந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வந்த நிலையில்.மிகவும் பிரசித்தி பெற்ற திருவெற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் சன்னதியில் உள்ள வடிவுடையம்மன் உற்சவ சிலைக்கு பூக்களால் அலங்காரங்கள் செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க பெண்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து திருவிளக்கிற்கு பூக்கள் வைத்து மஞ்சள் குங்குமம் மலர்கள் தூவி உலக நன்மை வேண்டியும் அனைவரும் நோய் நொடி இன்றி நலமாக வாழவும் குடும்ப நன்மை வேண்டியும் 108 விளக்கு ஏற்றி பெண்கள் மனமுருக விளக்கேற்றி பூஜை செய்து வழிபட்டனர் பின்னர் உற்சவ சுவாமிக்கு தூப தீப ஆராதனைகள் செய்து வழிபட்டனர்.

விளக்கு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

SRINIVASAN
9171920032