எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

உலக நூலகத் தந்தை எஸ் ஆர் அரங்கநாதனின் 134 ஆவது பிறந்தநாள் தினம் தேசிய நூலகர் தினமான அவர் பயின்ற பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வாசகர் வட்டத்தினர் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்று மரியாதை செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிறந்த எஸ் ஆர் அரங்கநாதன் நூலகத்தில் புத்தகங்களை தேர்ந்தெடுக்கும் முறையான கோலன் பகுப்பாய்வு முறையை உலகுக்கு அறிமுகம் செய்தவர்.

சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்த அரங்கநாதன் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் முதுநிலை கணிதவியல் கல்வி பயின்றார் அதனைத் தொடர்ந்து பல்வேறு கல்லூரிகளில் கணிதவியல் பேராசிரியராக பணியில் இருந்தார்.

தொடர்ந்து சென்னை பல்கலைக்கழக நூலகராக பணியில் சேர்ந்தார் அப்பொழுது அவர் புத்தகங்களை தேர்ந்தெடுக்கும் முறையான கோலன் பகுப்பாய்வு முறையை கண்டறிந்தார்.

இவரது கோலன் பகுப்பாய்வு முறையை உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொண்டனர். இன்றளவும் உலக நாடுகளில் நூலகங்களில் இவரது கோலன் பகுப்பாய்வு முறையே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இவர் உலக நூலக தந்தை என அழைக்கப்பட்டு வருகிறார்.

அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 12ஆம் தேதி தேசிய நூலகர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு அவர் பயின்ற சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு சீர்காழி நூலக வாசகர் வட்டத்தினர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சீர்காழி நூலக வாசக வட்டத்தின் தலைவர் பாபு நேசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி நிர்வாக அலுவலர் தங்கவேல் தலைமை ஆசிரியர் முரளிதரன் நூலக வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் வி.வி.நாதன், சீர்காழி நூலக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து சீர்காழி நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள எஸ் ஆர் ரங்கநாதன் திருவுருவப்படத்திற்கு நூலகர் வாசகர் வட்டத்தினர் திரளானூர் கலந்து கொண்டு மலரு தூவி மரியாதை செய்தனர்