அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்கம் பேரவை கூட்டம் நடந்தது பிரபுகுமார் தலைமை தாங்கினார்
சிஐடியு மாவட்ட செயலாளர் தோழர் அரியலூர் துரைசாமி சங்கம் சம்பந்தமாக பேசினார் ஆட்டோ சங்கம் மாவட்ட தலைவர் செந்தில்குமார் செயலாளர் சத்தியமூர்த்தி சிபிஐஎம் செயற்குழு பரமசிவம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்
சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் தலைவர் பிரபுகுமார் செயலாளர் ஆறுமுகம் பொருளாளர் ஆரோக்கியசாமி துணை தலைவர் கலையரசன் துணை செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
புதிய நிர்வாகிகளை பாராட்டி சி ஐ டி யு மாவட்ட செயலாளர் துரைசாமி பேசினார் இப்பகுதியில் எந்த சான்றிதழும் இல்லாமல் ஆட்டோக்கள் ஓட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆன்லைனில் ஆட்டோ ஓட்டுநர் மீது அபராதம் போடுவதை நிறுத்த வேண்டும் இன்று முதல் சிஐடியு சங்கத்தோடு இணைந்து செயல்படுவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
