கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக்கழகத்திற்கு சொந்தமான டான்டீயில் சுமார் 350 க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்

இந்நிலையில் இவர்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் குடியிருப்புகளை சுற்றி புதர்கள் மண்டி கிடப்பதால் பாம்பு மற்றும் வனவிலங்குகளின் தொந்தரவு அதிகமாக இருப்பதாகவும் இதனால் உயிருக்கு பயந்து தங்களின் பிள்ளைகளின் நலன் கருதி பணிசெய்து வருவதாகவும் இதுபற்றி துறைசார்ந்த அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்

மேலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பல பலன்கள் எதுவும் முறையாக வழங்கப்படாமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து இன்று தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

விடுதலை சிறுத்தைகள் சங்க தலைவர் வீரமணி தலைமையில் சங்க பொதுச்செயலாளர் கேசவமருகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய முறையான ஊதியம் உரிய காலத்தில் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட இதர சலுகைகளை முழுமையாக வழங்க வேண்டும் இல்லையெனில் ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் தலா 15 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கினால் டான்டீயை விட்டு வெளியேறுவதாகவும் தெரிவித்துள்ளனர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் சுமார் 350 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்