திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த நான்காம் தேதி முதல் 7- ஆம் தேதி வரை நான்கு நாட்கள் தொடர்ந்து மாணவர்களுக்கு ரத்த சோகை சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயவேல் துவக்கி வைத்தார்.
மருத்துவர்கள் விக்னேஸ்வரன், இளமுகிலன் மற்றும் மருந்தாளுநர் வேணுகோபால், உதவியாளர்கள் தனலட்சுமி, கவிதா, சுபத்ரா, விக்னேஷ் ஆகியோர்கள் இரத்த சோகை உள்ள மாணவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கி மாத்திரைகள் வழங்கினர்.
