துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தளுகை ஊராட்சியில்(ஆக-06) “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது.
இம்முகாமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் துவக்கி வைத்து பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுக்கள் மீது உரிய காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மகளிர் உரிமை தொகை, இலவச பட்டா ,பெயர் மாற்றம், ரேஷன் கார்டு,முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
இந்நிகழ்வில் வருவாய் துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் மருத்துவ துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டது. முகாமில் காவல்துறை, பள்ளி கல்வித்துறை, தாட்கோ, மின்சாரத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, ஆதி திராவிடர் நலத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட 15 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
இதில் ஒன்றிய துணை செயலாளர் முத்துச்செல்வன், ந. அசோகன்,திருச்சி வடக்கு மாவட்ட துணை செயலாளர் சோபனபுரம் கனகராஜ், நகர செயலாளர் நடராஜன், வட்டாட்சியர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார்,பழனிசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர்,ஊராட்சி செயலாளர்கள் பிரகாஷ் ,அசோக்குமார், சின்னத்துரை, மதன், ராமசந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
