கூடலூர் அருகே தொரப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டவும், யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க அகழிகள் அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பாஜகாவின் மாவட்ட இளைஞரணி தலைவர் பிரேம்யோகன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்…..
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தொரப்பள்ளி, மண்வயல், போஸ்பாரா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகளை நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக கிராமப் பகுதியில் உலா வரும் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல், வாழை, பாக்கு, தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் குடியிருப்புகளை உடைத்து சேதப்படுத்துவதால் பொதுமக்கள் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்களுக்கிடையே நாள்தோறும் வாழ்ந்து வருகின்றனர்.
இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க அகழிகள் அமைக்க வேண்டும், சேதமடைந்த பயிர்களுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
அதேபோல் உதகை நகரில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பெரும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதால் அதனை கூண்டு வைத்து பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பாஜகாவின் மாவட்ட இளைஞரணி தலைவர் பிரேம்யோகன் மற்றும் பாஜகா வினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
