கே வி முகமது அரியலூர் செய்தியாளர்:


அரியலூர் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைடி கீழப்பழுவூர் மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பில் ஜெனிவா ஒப்பந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

அரியலூர் மாவட்ட அளவில் அனைத்து கல்லூரிகளின் மாணவ மாணவிகள் பங்கேற்றனர் ஜெனிவா தின கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடந்தது விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் யூத் ரெட் கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஸ்டீபன் வரவேற்று பேசினார் கல்லூரி முதல்வர் விஜய் முன்னிலை வகித்தார்

அரியலூர் மாவட்ட கிளையின் தலைவர் ஜெயராமன் தொடக்க உரையாற்றினார் மாவட்ட துணை தலைவர் சந்திரசேகர் மாவட்ட செயலாளர் சண்முகம் மாவட்ட பொருளாளர் எழில் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்

ஜெனிவா ஒப்பந்த தின பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது விழா நிறைவில் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் சங்கீதா அனைவருக்கும் நன்றி கூறினார்