திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் உள்ள 6 நிரந்தர உண்டியல்கள் திறப்பு திருக்கண்ணமங்கை ஆய்வாளர் எஸ். தமிழ்மணி மேற்பார்வையில், ஆலய செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார், தக்கார்/ ஆய்வர் க.மும்மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
திருக்கோயில் பணியாளர்கள், வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், விடியல் பாரா மெடிக்கல் காலேஜ் மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் எண்ணிக்கை பணியில் ஈடுபட்டனர். 6 நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூபாய் 16 லட்சத்து 53 ஆயிரத்து 417 ரொக்கமும், பொன் இனங்கள் 95 கிராமும், வெள்ளி இனங்கள் 428 கிராமும் பக்தர்களால் காணிக்கையாக கிடைக்கப் பெற்றது.
6 நிரந்தர உண்டியல்கள் திறப்பு விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார், தக்கார்/ ஆய்வர் க.மும்மூர்த்தி, திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
