மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் வழிகாட்டுதலின் படி, மதுரை மாநகரில் குற்றச்சம்பவங் களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், மாநகர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில், மாநகரில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் களுடனான கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெட்ரோல் விநியோகம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய அரசின் உத்தரவுகள் குறித்தும், பராமரிக்க பட வேண்டிய பதிவேடுகள் குறித்தும் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பெட்ரோல் பல்க் உரிமையாளர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்புரை யாற்றினார். உடன் மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு) உடனிருந்தார்.
