துறையூர் ஆக -06
திருச்சி மாவட்டம் துறையூர் செங்குந்தர் துவக்க பள்ளியில் நேற்று (ஆக-05) “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது.முகாமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இம்முகாமில் துறையூர் நகராட்சிக்குட்பட்ட 7,8 வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் பட்டா, ரேசன் கார்டு, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
இதில் வருவாய்த்துறை, மின்சார துறை,காவல் துறை,வட்ட வழங்கல் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, மருத்துவ துறை, கூட்டுறவு துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை,குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, பள்ளி கல்வி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை உள்ளிட்ட துறையினர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.முகாமில் நகர மன்ற தலைவர் இ.செல்வராணி, துணைத் தலைவர் மெடிக்கல் ந முரளி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீ ராம்,வட்டாட்சியர் சிவகுமார், நகராட்சி ஆணையர் வாசுதேவன்,நகர்மன்ற உறுப்பினர்கள் சுதாகர், இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஐயப்பன், ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் ஆனந்த் , சமூக நலத்துறை தனி வட்டாட்சியர் சத்ய நாராயணன்,மண்டல துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ், வருவாய் ஆய்வாளர் இளவரசி, வசந்தகுமார் திருநாவுக்கரசு உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் , துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இம்முகாமில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட மனு அளித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
