துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் சிவாலயா திருமண மண்டபத்தில் இன்று (ஆக-06)
சொரத்தூர்,குன்னுப்பட்டி, நாகலாபுரம் கிராம ஊராட்சிகளுக்கு “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது.

முகாமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இம்முகாமில் துறையூர் அந்த ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பட்டா, ரேசன் கார்டு, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

முகாமில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீராம், வட்டாட்சியர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், ஒன்றிய செயலாளர்கள் சிவ சரவணன் ,வீரபத்திரன், அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஐயப்பன்,சமூக நலத்துறை தனி வட்டாட்சியர் சத்ய நாராயணன், ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் ரமேஷ், மண்டல துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ்,வருவாய் ஆய்வாளர் இளவரசி,கிராம நிர்வாக அலுவலர்கள் வசந்த மலர், சுரேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோகிலா, துரைராஜ், மேலாளர்கள் பெரியசாமி, பாஸ்கர், ஊராட்சி செயலர்கள் சாமிவேலு, செந்தில்குமார் , செல்லதுரை, மாலதி, சந்திரசேகர்,சங்கீதா,தமிழ் செல்வன் மற்றும் வருவாய்த்துறை, மின்சார துறை,காவல் துறை,வட்ட வழங்கல் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, மருத்துவ துறை, கூட்டுறவு துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை,குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, பள்ளி கல்வி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை உள்ளிட்ட துறையினர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.இதில் 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்