தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக திருக்குறள் திருப்பணிகள் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அவர்கள் 31.12.2024-அன்று கன்னியாகுமரியில் நடந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் அறிவித்தார்.
அத்திட்டத்தினை திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுத்திட மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக் கூட்டம் 05.08.2025 மாலையில் ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அரசு விருதாளர் என்ற முறையில் ஒரு உறுப்பினராக இணைக்கப்பட்டுள்ள நான் கலந்துகொண்டேன். மேலும் உறுப்பினர்கள் கவிஞர் ந.ஜெயபாலன் ,எழுத்தாளர் பாப்பாக்குடி இரா.செல்வமணி, திருக்குறள் தகவல் மைய தலைவர் வை.இராமசாமி மற்றும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் கனகலட்சுமி ,அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
இத்திட்டம் குறித்து ஆட்சித் தலைவர் சில கருத்துகளைச் சொன்னார். தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் சுந்தர் இத்திட்டத்தில் மூன்று குழுக்கள் மூலமாக 90-வாரங்கள்(ஒரு குழு மூலம் 30 வாரங்கள்)பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அதற்கான குழுக்களின் பொறுப்பாளர்களையும் தெரிவித்தார்.
நன்றி.
….கவிஞர் பேரா.
