தேனி மாவட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் ஆர். ஜெயசுதா தலைமையில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் முன்னிலையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜெயசுதா பேசும்போது குழந்தைகள் நலன் தொடர்பாக பல்வேறு கூட்டப் பொருட்கள் விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக பள்ளி இடைநிற்றல் குழந்தைகளின் நலன் குழந்தை திருமணம் தடுப்பு இளம் வயது கர்ப்பநிலை தடுப்பு பாலியல் குற்றங்கள் உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ஊரகம் தாலுகா நகராட்சி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டத்தினை மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடத்தி குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
அனைத்து பள்ளிகளிலும் போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து குழந்தைகள் நல குழு மூலம் மறுவாழ்வு நடவடிக்கை மேற்கொள்ளுதல் குழந்தை தொழிலாளர் பணி அமர்த்தப்படுவது முற்றிலும் தடுத்தல் மற்றும் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு பாலியல் குற்றங்களுக்கான சட்ட ரீதியான தண்டனைகள் பற்றிய பதாகைகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பொது இடங்களில் காட்சிப்படுத்த வேண்டும்
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பள்ளிகளிலும் மற்றும் அரசு பேருந்துகளிலும் குழந்தைகள் சேவை எண் 1098 குறித்த விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார் . இந்த கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தேவி தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
