தேனி அல்லிநகரம் நகராட்சியில் உங்கள் ஊரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பார்வை தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி வார்டு எண் 21.22. ஆகிய பகுதிகளுக்கு என் ஆர் டி நகர் பகுதியில் உள்ள அன்னப்ப ராஜா திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பங்கேற்று பார்வையிட்டார்

தமிழ்நாடு அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் பொது மக்களை சென்று சேரும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தினை 15.07

  1. சென்னையில் தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். இந்த முகாம்கள் மூலம் நகர் பகுதிகளுக்கு 13 துறைகளில் 43 சேவைகளும் கிராம பகுதிகளுக்கு 15 துறைகளில் 45 சேவைகளும் வழங்கப்பட உள்ளது கலைஞர் மகளிர் தொகை பெற தகுதி யுள்ள பெண்களும் இந்த முகாம்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம் இதன்படி மாவட்ட ஆட்சித் தலைவர் தேனி அல்லிநகரம் நகராட்சியில் நடைபெற்ற முகாமில் பங்கேற்று மனு அளித்தவர்களுக்கு உடனடி தீர்வாக குடும்ப அட்டை மின் இணைப்பில் பெயர் மாற்றம் உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் தேனி நகராட்சி நகர் மன்ற தலைவர் வேணு பிரியா பாலமுருகன் தாசில்தார் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.