திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் தன்னாட்சி கல்லூரி அஞ்சல் தலை சேகரிப்பு சங்கத்தின் சார்பில் அஞ்சல் தலை சேகரிப்பு கலையினை எடுத்துரைத்த திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர்,தலைவர் லால்குடி விஜயகுமார், செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர்க்கு பிஷப் ஹீபர் கல்லூரி விரிவாக்கத்துறை கல்வி புல முதன்மையர் முனைவர் ஆனந்த் கிதியோன் பாராட்டி நினைவு பரிசு வழங்கி பேசுகையில்,..

அஞ்சல் தலை சேகரிப்பு மூலம் பழங்கால நினைவுகளையும் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் நினைவு கூறலாம் ஒவ்வொருவரும் அஞ்சல்தலை சேகரிப்பு பொழுதுபோக்கு கலை மூலம் பொது அறிவை வளர்க்கலாம். நவீன காலத்தில்அனைவரும் ஆன்லைன் மூலமாகவே அனைத்து பரிமாற்றத்தையும் மேற்கொள்கின்றனர்.

வாட்ஸ்அப், பேஸ்புக், வீடியோ கால் மூலமாக செய்திகளை பகிர்ந்து கொள்கின்றார்கள். அஞ்சல் தலை சேகரிப்பு கலை மூலம் பாரம்பரியம் கலாச்சாரத்தை அறிந்து கொள்ளலாம். இன்றைய தலைமுறையினர் உறவினருக்கும் நண்பர்களுக்கோ கடிதம் எழுதுவதோ, வாழ்த்து அட்டை அனுப்புவதோ இல்லை என்றார். முன்னதாக பிஷப் ஹீபர் கல்லூரி அஞ்சல் தலை சேகரிப்பு சங்க ஒருங்கிணைப்பாளர்களான
உதவிப் பேராசிரியர் எல்டின் ரோமெல்லா வரவேற்க, நிறைவாக கேண்டிஸ் தீப்தி நன்றி கூறினார்.