கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர் புதுக்கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2025- 26 கல்வி ஆண்டிற்கான கலை திருவிழா போட்டி பசுமையும் பாரம்பரியமும் என்ற தலைப்பில் நடைபெறுகிறது.
பள்ளி அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் தொடங்கி 18 தேதி வரை பள்ளி அளவில் நடைபெற்று வருகிறது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சி ப்பட்டியில் நடைபெற்ற தொடக்க விழாவில் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். ஆங்கில ஆசிரியர் சிந்தியா அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா கலை திருவிழா போட்டிகள் பேசும் பொழுது
கலைத் திருவிழா என்பது தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் ஒரு கலை மற்றும் கலாச்சார திருவிழா ஆகும். இந்த திருவிழாவில், மாணவர்கள் பல்வேறு கலைப் போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.
இது மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும், கலைத் திறன்களை மேம்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படுகிறது.நடப்பு கல்வியாண்டில்
ஒன்று, இரண்டு வகுப்புகளுக்கு மழலையர் பாடல் ஒப்பித்தல், கதை கூறல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடப்போட்டி, களிமண் பொம்மை செய்தல், மூன்று நான்கு ஐந்து வகுப்புகளுக்கு பேச்சுப்போட்டி,
திருக்குறள் ஒப்பித்தல், மெல்லிசை, தனிப்பாடல், தேச பக்தி பாடல், களிமண் பொம்மைகள் செய்தல், மாறுவேட போட்டி, நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல், தனி நபர் நடிப்பு உள்ளிட்ட தலைப்புகளிலும் 6, 7, 8 வகுப்பு மாணவர்களுக்கு ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல், களிமண் சுதை வேலைப்பாடு, மணல் சிற்பம், ரங்கோலி, செவ்வியல் இசை, நாட்டுப்புறப் பாடல், வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், பரதநாட்டியம், தனிநபர் நடிப்பு,
பல குரல் பேச்சு உள்ளிட்ட தலைப்புகளில் கலை திருவிழா போட்டிகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு வகுப்பு மாணவ,மாணவிகளும் அனைத்து விதமான போட்டிகளிலும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் பேசினார். மாணவ, மாணவிகள் அனைவரும் ஆர்வமுடன் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
பள்ளி அளவில் வெற்றி பெறக்கூடிய மாணவர்கள் வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் எனவும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் எனவும்,மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டும். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கலையரசன் என்ற பட்டமும், மாணவிகளுக்கு கலையரசி என்ற பட்டமும் வழங்கப்படும் என்று பேசினார். இந்நிகழ்வில் ஆசிரியர் மணிமேகலை நன்றி கூறினார்.
