கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் சுமார் 52 ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இவர்களுக்கு மாத ஊதியம் தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.450 வழங்கப்பட்டு வருவதாகவும் ஆனால் நீலகிரி மாவட்ட பகுதியில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களுக்கு 700 ரூபாய் வழங்கப்படுவதோடு ஒரு நேர உணவும் வழங்கப்பட்டு வருவதாகவும் ஆகவே வால்பாறை மலைப்பகுதியில் பணியும் தங்களுக்கும் நாள் ஒன்றுக்கு 700 ரூபாயும் ஒருவேளை உணவும் வழங்க வேண்டும்,

மேலும் பணியாளர்களுக்கான இஎஸ்ஐ, பிஎஃப் உள்ளிட்ட பலன்கள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பணிக்குச் செல்லாமல் நகராட்சி அலுவலக வளாகத்தில் அனைவரும் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்

தகவலறிந்து அப்பகுதிக்கு சென்ற வால்பாறை காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் பணியாளர்களின் கோரிக்கையை கனிவுடன் கேட்டறிந்து தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இல்லாததால் நாளை மறுதினம் தங்களின் கோரிக்கைகளை அதிகாரிகளிடம் நேரடியாக தெரிவித்து

உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அதுவரை தர்ணாவை கைவிடவும் கேட்டுக்கொண்டதையடுத்து மதியம் ஒரு மணியளவில் பணியாளர்கள் தர்ணாவை கைவிட்டு களைந்து சென்றனர்