காரமடை ஒன்றியத்திற்கு உட்பட்ட மலைப்பகுதியில் உள்ள 13 அரசு பள்ளி மற்றும் சிக்காரம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளி மாணவ மாணவியருக்கும் 22 ஆம் ஆண்டு இலவச சீருடையும் ,10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்க தொகையும் வழங்கும் விழா ஸ்ரீ ராஜலட்சுமி சாமப்பா அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்றது.

அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும் சிக்காரம் பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான திரு.ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா வை சேர்ந்த சுவாமி நாராயணந்தர் அருள் ஆசி வழங்கி சீருடைகளை மாணவர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கல்வித்தந்தை திரு.ஆறுமுகசாமி, மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ. கே . செல்வராஜ், முன்னாள் சி.பி.ஐ, டி.எஸ்.பி. திரு வெள்ளிங்கிரி , ரோட்டரி மாவட்ட ஆளுநர் பி. தனசேகர், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி செயலாளர் டாக்டர் கவிதாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்பட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்