ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கவின் ஆணவ கொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்தியூர் ஒன்றிய தாலுகா செயலாளர் வக்கீல் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், ஆணவக் கொலைகளுக்கு தனி சட்டம் இயற்ற வேண்டும்,

சாதிய பாகுபாடு பார்க்கும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வி நிலையங்களில் மாணவ மாணவியர்களுக்கு உளவியல் ரீதியான விழிப்புணர்வு பாடங்களை நடத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

இதில், பவானி நகர செயலாளர் பாலமுருகன், சிபிஎம் அந்தியூர் தாலுக்கா செயலாளர் முருகேசன், விசிக நிர்வாகிகள் தங்கராசு, சுரேஷ், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் பொன்னுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.