தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் திமுக ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.ஆ. மகாராஜன் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன இந்த மருத்துவ முகாம் திட்டத்தினை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்

இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இந்த மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டது இதன்படி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஜக்கம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. மகாராஜன் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக முகாம் மேடைக்கு வந்த தங்க தமிழ்ச்செல்வன் முகாம் வரவேற்பு பேனரில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகராஜன் இடம் பெற்றிருக்கிறது நடைமுறைப்படி நாடாளுமன்ற உறுப்பினர் படம் இருக்க வேண்டும் என்று கலந்திடும் அவர் கோபப்பட்டார்

இதன் பிறகு நடைபெற்ற முகாம் மேடையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் போது நலத்திட்ட அட்டையை தங்க தமிழ்ச்செல்வன் கையில் இருந்து பிடுங்கி நான் தான் பயனாளிகளுக்கு வழங்குவேன் எம்.எல்.ஏ.மகாராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஒரு கட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையிலே கனத்த குரளை எழுப்பி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

இதனைத் தொடர்ந்து கலெக்டர் காவல்துறையினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் அனைவரும் தங்கத்தமிழ்ச் செல்வன் மகாராஜனை சமாதானம் செய்தனர் . இதனால் முகாம் விரைவிலே முடிக்கப்பட்டது நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மக்கள் முன்னிலையில் திமுக எம்பி எம்எல்ஏ வாக்குவாதத்தில் ஈடு பட்டது ஆண்டிபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.