வாடிப்பட்டி.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாய் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 2025- 2026ம் கல்வி ஆண்டுக்கான அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் அலங்காநல்லூர் குறுவட்ட விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை எர்ரம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி செய்திருந்தது. இந்த விளையாட்டு போட்டியில் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டு கொடி அசைத்து வைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் மேலூர் இந்திரா, கலந்து கொண்டு ஒலிம்பிக் கொடியை ஏற்றினார் உடன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனைவர் வினோத், மேலூர் கல்வி மாவட்ட கொடியை ஏற்றினார் குறுவட்ட போட்டிகளை ஏற்று நடத்தும் எர்ரம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரேகா, குறுவட்ட கொடியை ஏற்றி சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார்.

இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாணவ மாணவியருக்கு விளையாட்டின் முக்கியத்துவத்தையும் தமிழக அரசு மாணவர்கள் வளர்ச்சிக்கு செயல்படுத்தும் திட்டங்களையும் எடுத்து கூறினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர் ஆசிரியர் பெருமக்கள் தாய் பள்ளியின் தாளாளர் காந்தி, திமுக ஒன்றிய செயலாளர் பாலராஜேந்திரன், வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டி துணைத் தலைவர் வக்கீல் கார்த்திக், முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ், இளைஞரணி வினோத், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.