திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி, குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கெத்தல்ரேவ் ஊராட்சிக்கான “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் குண்டடம் சமுதாய நலக்கூடத்தில் நேற்று வியாழன் கிழமை நடைபெற்றது.
முகாமை தமிழக மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு அரசு சார்ந்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கப்பட்டது. இதில் தாராபுரம் வட்டாட்சியர் திரவியம், குண்டடம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சு. சந்திரசேகரன், சடையபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன் மற்றும் மருத்துவர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், இந்நாள்-முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், தி.மு.க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
