திருவொற்றியூர்

திருவொற்றியூர் ஐந்தாவது வார்டு உட்பட்ட சின்ன எர்ணாவூர் கலைஞர் நகர் அம்பேத்கர் நகர் ராஜீவ் காந்தி நகர் உள்ளிட்ட பகுதியிலிருந்து
மகளிர் உரிமைத் தொகை கேட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்ட பெண்கள்.
திருவொற்றியூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் 15 துறைகளின் 46 சேவைகளும் நகர்ப்புற பகுதிகளில் 13 துறைகளின் 43 சேவைகளும் வழங்கப்படுகிறது

இந்த திட்டம் மாநிலம் முழுவதும் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிட்டப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி திருவெற்றியூர் சென்னை மாநகராட்சி 1 வது மண்டலம் 5 வது வார்டு உங்களுடன் ஸ்டான்லின் திட்டம் சிறப்பு முகாம் நடைப்பெற்றது

இந்த தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்ட முகாமில் ஆயிரக்கணக் கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது ஊனமுற்றோர் மற்றும் முதியோர்களுக்கு வீல் சேர் வசதி செய்யப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.

இந்த முகாமில் மாவட்ட கழக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர். ஒன்னாவது மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு. பகுதி செயலாளர் வைமா அருள் தாசன். லயன் சங்கர்.மற்றும் மண்டல உதவி ஆணையர் விஜயபாபு செயல் பொறியாளர் பாபு. பாண்டியன் மற்ற அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்

திமுக நிர்வாகிகள் உட்பட ஆகியோர் பார்வையிட்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து தேவையான உதவிகளை உடனடியாக செய்து கொடுக்க அதிகாரியிடம் கேட்டுக் கொண்டதோடு கலைஞர் உரிமைத்தொகை , ஜாதி சான்றிதழ் , ஆதார் கார்டு ரேஷன் கார்டில் பெயர் நீக்குதல் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட சான்றிதழ்களை உடனடியாக பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

13 துறைகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர் பரிசீலனை செய்யப்பட்டு உடனுக்குடன் திருத்தம் செய்யப்பட்டு உடனுக்குடன் தீர்வு கண்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெண்கள் உரிமைத் தொகை ரேஷன் கார்டு , ஆதார் கார்டு , ஜாதி சான்றிதழ்களை உடனடியாக வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த பெண்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.