கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள தாய் முடி எஸ்டேட் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் நுழைந்த காட்டுயானைகள் அப்பகுதியில் குடியிருந்து வரும் முனியாத்தாள்,மீனா, சௌந்தரராஜன், மாடசாமி மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் உட்பட ஆறு வீடுகளை சேதப்படுத்தியது
அதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற வால்பாறை நகராட்சி நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் மாரியம்மாள் முன்னிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கினர் இந்நிகழ்வின் போது உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மகேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்
