தேனி மாவட்டத்தில் கொத்தமல்லி விளைச்சல் இருந்தும் விலை இல்லை விவசாயிகள் கவலை தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் கம்பம் ராயப்பன்பட்டி ஆனைமலையான் பட்டி ஆண்டிபட்டி பெரியகுளம் லட்சுமிபுரம் சின்னமனூர் வெள்ளையம்மாள்புரம் ஓடைப்பட்டி கோவிந்த நகரம் ஜங்கால்பட்டி வெங்கடாசலபுரம் தாடிச் சேரி தப்புக் குண்டு அரண்மனைப் புதூர் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் கொத்தமல்லி விவசாயம் நடைபெற்று வருகிறது.

கொத்தமல்லி நடவு செய்த 50 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் மழைப் பொழிவுஅதிகரித்து இருந்தால் செடி அழுகி கடுமையாக பாதிக்கப்படும் அதிகம் தாக்கம் அதிகரித்து இருந்தால் வளர்ச்சி குன்றி கருகிவிடும் தற்போது போடி நாயக்கனூர் பகுதிகளில் பெருமாள் கவுண்டன்பட்டி அம்மாபட்டி சிலமலை சில்லமரத்துப்பட்டி டொம்புச்சேரி விசுவாசபுரம் பத்திரகாளிபுரம் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்பொழுது பெய்து வரும் சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும் பெய்து வரும் தொடர் சாரல் மழையால் கொத்தமல்லி விளைச்சல் அதிகரித்துள்ளார்

பெங்களூரு ஓசூர் பகுதிகளில் விளைந்த கொத்தமல்லியை தேனி மாவட்டத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர் இதனால் தற்போது கிலோ 20 க்கு விவசாயிகளிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

இதுகுறித்து கொத்தமல்லி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறும் போது கொத்தமல்லி சாகுபடியில் களை எடுப்பு மருந்தடிப்பு தொழிலாளர் சம்பளம் போக விலை கட்டுபடியாகவில்லை எனவே விளைந்த கொத்தமல்லியை அறுவடை செய்ய தயக்கும் காட்டி வருகிறோம் கடந்த ஆண்டு கொத்தமல்லி விளைச்சல் விளையும் அதிகரித்து இருந்தது சீசன் துவக்கத்தில் கிலோ ரூபாய் 100 முதல் 120 வரை இருந்தது இந்த ஆண்டு போதிய விளைச்சல் இருந்தும் விலை இல்லாமல் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விலை போகிறது விலை குறைவால் விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளோம் என்று விவசாயிகள் கவலையுடன் கூறினார்கள்