கந்தர்வக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் 1330 திருக்குறளையும் படிப்பதற்காக திருக்குறள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்.

அறிவியல் ஆசிரியர் ரகமதுல்லா அனைவரையும் வரவேற்றார். திருக்குறள் 1330 குறள்களையும் மாணவ, மாணவர்கள் எவ்வாறு எளிமையாக படித்து நினைவு படுத்திக் கொள்வது எனவும், தொடர்ந்து திருக்குறளை பாடல் வடிவிலும், குறள் தாத்தா என அழைக்கப்படும் குறல் மகன் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்தினார்.


இந்நிகழ்வு மூலம் மாணவர்கள் தினந்தோறும் திருக்குறளை படிப்பதற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடைபெற்றது. மாணவர்கள் வாழ்வில் திருக்குறளை முழுமையாக பயின்றால் அவர்கள் நல்ல பண்புகளை பெற முடியும், நல்ல மனிதனாக வாழ முடியும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.


பள்ளியின் சார்பில் குறள் தாத்தாவுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் திருக்குறள் பொறித்த பையை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சிந்தியா, நிவின், வெள்ளைச்சாமி செல்விஜாய், ஜெம்ம ராகினி சகாய ஹில்டா கணினி உதவியாளர் தையல்நாயகி, மழலையர் ஆசிரியர் கௌரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.