அரியலூர் மாவட்ட- மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி தலைமையில் அரியலூர் ஒன்றிய செயலாளர் பாண்டியன், செந்துறை ஒன்றியம் சிவக்குமார் நாகமங்கலம் பிச்சைபிள்ளை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்

அரியலூர் நகரம் பேருந்து நிலையம் பின்புறம் மக்கள் குடியிருப்புகள் பஸ் போக்குவரத்து அரசின் மக்கள் நல்வாழ்வு மையம் சூழ்ந்துள்ள இடத்தில் அரசின் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருவதால் மது குடிப்பவர்களின் கூட்டத்தினை கடந்து பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் இவ்வழியை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர்

ஆகவே இம்மது கடையை உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளனர் மேலும் பல்வேறு கோரிக்கைகளும் அந்த மனுவில் இடம் பெற்று இருந்தது